fbpx

சூரியனை நோக்கி சீறிப்பாய தயாராக இருக்கும் ஆதித்யா எல்1..!! நேரில் பார்க்க ஆசையா..? உடனே பதிவு பண்ணுங்க..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதையடுத்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 2ஆம் தேதி காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த விண்கலம் தனது 4 மாத பயணங்களுக்கு பிறகு சென்று சேர்ந்து ஆய்வை தொடங்கவுள்ளது. பொதுவாக ராக்கெட் ஏவுவதை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் தனியாக 10,000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்.2ஆம் தேதி விண்ணில் பாய உள்ள ஆதித்யா எல்-1 ராக்கெட்டை நேரில் பார்வையிட விரும்புவோர் https://lvg.shar.gov.in என்ற இணையதளத்தில் பெயரை முன்பதிவு செய்து அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

Chella

Next Post

என் மச்சான பத்தியே தப்பு தப்பா பேசுறியா…..? சிறுவனை துண்டு துண்டாக வெட்டிய ஆட்டோ ஓட்டுனர்….!

Thu Aug 31 , 2023
மும்பை அருகே தன்னுடைய மைத்துனர் பற்றி புகார் தெரிவித்ததால், கடுப்பான ஆட்டோ ஓட்டுநர் சிறுவனை துண்டு துண்டாக வெட்டி, கொடூரமான முறையில், கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இருக்கின்ற செம்பூர் பகுதியை சேர்ந்தவர் சபிக் அகமது ஷேக் (33). இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் அவாத் (17) என்பவர் ஷேக்கின் மனைவி மற்றும் சகோதரி […]

You May Like