சூரியனை ஆய்வு செய்ய செலுத்தப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் பூமி மற்றும் நிலவுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை அனுப்பியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், சந்திராயன் 3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 விண்கலம் கடந்த 2 ம் தேதியன்று விண்ணில் செலுத்தியது.
ஆதித்யா-எல்1 சுற்றுப்பாதை உயரம் 4 முறை மாற்றப்பட உள்ள நிலையில் கடந்த 3ம் தேதியன்று முதல் முறையாக உயரம் வெற்றிகரமாக மாற்றப்பட்டது. அனைத்தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி இரண்டாவது சுற்று வட்ட பாதைக்கு அதன் உயரம் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் அடுத்த கட்டமாக உயரத்தை மாற்றி அமைக்கும் பணி செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளிக்கு பயணிக்கும் ஆதித்யா எல்1 விண்கலம் பூமி மற்றும் நிலவுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை அனுப்பியுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.