தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பின் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 2024-25ஆம் கல்வியாண்டு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முன்னதாகவே மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமின்றி மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
English Summary : Admission of Tamil Nadu Government Schools
Read More : இனி ஆர்டிஓ அலுவலகங்களில் ‘Driving Licence’ கிடைக்காது..!! எங்கு வாங்க வேண்டும்..? வெளியான அறிவிப்பு..!!