fbpx

இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை..!! வரும் 11ஆம் தேதியே கடைசி..!! உடனே இதை பண்ணிருங்க..!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2023-24ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் எஸ்.சி./எஸ்.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.250 மட்டுமே செலுத்தினால் போதும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது,.

விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட இணையதளம் மூலமாக செலுத்தலாம். மேலும், இணையதளம் வாயிலாக செலுத்த முடியாதவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் ”The Director, Directorate of Collegiate Education, Chennai – 15″ என்ற பெயரில் 1.09.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்ய 11.09.2023 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 93634 62070, 93634 62007, 93634 62042, 93634 60204 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’சனாதன ஒழிப்பு மாநாடு’..!! ’அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறாரா சேகர்பாபு’..? செப்.11இல் போராட்டம் அறிவிப்பு..!!

Mon Sep 4 , 2023
சென்னையில் செப்டம்பர் 2ஆம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘ இந்த மாநாட்டிற்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைக்கவில்லை. சனாதன ஒழிப்பு மாநாடு என மிகச் சரியாக வைத்துள்ளீர்கள். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதுதான் சிறந்தது. டெங்கு, மலேரியா மற்றும் கோவிட் போன்றவற்றை போல சாதி மற்றும் ஏற்றத் தாழ்வுகளை ஊக்குவிக்கும் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்’ என […]

You May Like