fbpx

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாக உள்ளது. அதேபோல சிபிஎஸ்சி மாணவர்களுக்கு வருகிற 12-ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து 2024 – 2025 கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு ஏதுவாக இன்று முதல் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று இளநிலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் http://www.tngasa.in என்கிற இணையதளம் மூலம் பெறலாம். மேலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை மையங்கள் மூலம் விண்ணப்பங்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த மையங்களின் பட்டியல் மேலே உள்ள இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை, பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்….! இளைஞரின் உயிரை பறித்த உறவினர்கள்…

Baskar

Next Post

'கள்ளக்கடல்' நிகழ்வு நடக்கப்போகுது…!! மக்களே இன்று கடலுக்கு போகாதீங்க..!

Mon May 6 , 2024
இந்தியப் பெருங்கடலில் ‘கள்ளக் கடல்’ எனும் நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் அதீத கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்கடல் நிகழ்வு என்றால் என்ன? ‘கள்ளக்கடல்’ நிகழ்வு என்பது அறிகுறிகளின்றி திடீரென கடல் சீற்றம் அடைவது ஆகும். சற்றும் எதிர்பாராத தருணத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என்பதால் கேரளாவில் இதனை, ‘கள்ளக்கடல்’ நிகழ்வு என அழைக்கின்றனர். இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் […]

You May Like