ஏப்ரல் 30-ம் தேதி வரை அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து, அரசு ஆசிரியர்கள் அனைவரையும் கொண்டு மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை சிறப்பு முகாம் அடிப்படையில் கோடை விடுமுறைக்கு முன்னரே மேற்கொள்ள, அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்புக்களை பிரித்து வழங்கி, சேர்க்கையை அதிகரித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அரசு பள்ளியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்திட அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடங்கிய 2 நாட்களில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்தது. ஏப்ரல் 2-ம் தேதி நிலவரப்படி 3,00,167 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதில் 92.29% மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ஏப்ரல் 30-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.