க்யூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கைகள் நடைபெறும்.
தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் சேர்க்கைக்காக க்யூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதிய மாணவர்கள் எங்களுடைய வலைதளமான (www.rgniyd.gov.in) –ல் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த மாணவர்கள் க்யூட் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், மத்திய அரசின் இது இடஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வரும் நிலையில், கடந்த ஆண்டு ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய 6 படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது. எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (டேட்டா சயின்ஸ்), எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (சைபர் செக்யூரிட்டி), எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், (ஆர்ட்டிஃப்ஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மிஷின் லேனிங்), எம்எஸ்சி கணிதம், எம்ஏ ஆங்கிலம் மற்றும் எம்ஏ சமூகவியல் போன்ற புதிய படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டில் குழந்தைகள் உரிமை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக முதுநிலை கல்வியை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.