fbpx

ADMK | 40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் அதிமுக..!! எடப்பாடி பழனிசாமி அதிரடி..!!

ADMK | மத்திய சென்னை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடக் கோரி முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விருப்ப மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்ததால் கூட்டணியை முறித்துள்ளோம். அதிமுக கிளைக்கழகம் முதல் படிப்படியாக வளர்ந்த கட்சி, சிலர் நேற்று திருமணம் செய்து இன்றே குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். அண்ணாமலையின் செயல்பாடுகள் பாஜகவை அவர் தவறாக வழிநடத்திச் செல்வதை போல் தெரிகிறது.

பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதனை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என சிலர் இருந்தனர். தற்போது கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டதால், பாஜக கூட்டணிக்கு செல்ல கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். மக்களவை தேர்தலில் கூட்டணி அமையாவிட்டால் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட அதிமுக ஆயத்தமாகி வருகிறது.

கூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை இருக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்” என்று கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் முடிவு எட்டப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : BJP Annamalai | திமுக – அதிமுகவை ஓரங்கட்டிய பாஜக..!! அண்ணாமலையின் புதிய வியூகத்தால் முதலிடம்..!!

Chella

Next Post

Vijay TVK | 2026 முதல்வர் பதவி உறுதி..? நடிகர் விஜய் கட்சிக்கு அரசியல் ஆலோசகராகும் பிரஷாந்த் கிஷோர்..!!

Thu Feb 22 , 2024
நடிகர் விஜய் அழைத்தால் தமிழக வெற்றிக் கழகத்திற்காக பணி செய்ய தயார் என்று அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். Vijay TVK | கடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுகவுக்காக வியூகங்களை வகுக்க பிரஷாந்த் கிஷோரின் ஐ பேக் குழு ஒப்பந்தம் செய்யப்பட்டது. திமுகவுக்கான தேர்தல் பணிகளை பிரஷாந்த் கிஷோரின் குழுதான் கவனித்தது. பஞ்சாப், டெல்லி, ஆந்திரப்பிரதேசம் என்று பல மாநிலங்களில் ஆளும் கட்சிகளின் வெற்றிக்கு பிரஷாந்த் கிஷோர் […]

You May Like