அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அதிமுகவின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவின் பொது செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வருகின்ற 13ஆம் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.