fbpx

ADMK | பங்குனி உத்திரம்..!! அதிமுகவின் 33 வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல்..!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று தாக்கல் செய்யவுள்ளனர்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் என்பது கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. அதேபோல், 27ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும்.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் அதிமுக 33 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த 33 வேட்பாளர்களும் இன்று பகல் 12 மணிக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வேட்பாளர்கள் விவரம் :

வடசென்னை – ராயபுரம் மனோ

தென்சென்னை – ஜெயவர்த்தன்

காஞ்சிபுரம் – ராஜசேகர்

அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்

கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ்

ஆரணி – கஜேந்திரன்

விழுப்புரம் – பாக்யராஜ்

சேலம் – விக்னேஷ்

நாமக்கல் – தமிழ்மணி

ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்

கரூர் – கே.ஆர்.எல்.தங்கவேல்

சிதம்பரம் – சந்திரஹாசன்

நாகை – சுர்ஜித் சங்கர்

மதுரை – சரவணன்

ராமநாதபுரம் – ஜெயபெருமாள்

தேனி – நாராயணசாமி

கோவை – சிங்கை ராமச்சந்திரன்

பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி

பெரம்பலூர் – சந்திரமோகன்

திருச்சி – கருப்பையா

மயிலாடுதுறை – பாபு

தருமபுரி – அசோகன்

திருப்பூர் – அருணாசலம்

நீலகிரி – லோகேஷ்

வேலூர் – பசுபதி

திருவண்ணாமலை – கலியபெருமாள்

கள்ளக்குறிச்சி – குமரகுரு

சிவகங்கை – சேவியர் தாஸ்

நெல்லை – ஜான்சி ராணி

புதுச்சேரி – தமிழ்வேந்தன்

தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி

கன்னியாகுமரி – பசிலியா நசரேத்

ஸ்ரீபெரும்புதூர் – பிரேம் குமார்

Read More : Lok Sabha | ”ஐயா வாங்க.. அம்மா வாங்க”..!! ”நான் எல்லோருக்கும் வேட்டு வைக்கப் போறேன்”..!! மன்சூர் அலிகான் அதிரடி

Chella

Next Post

Ice Water எச்சரிக்கை!... மாரடைப்பை ஏற்படுத்தும்!… சீன ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Mon Mar 25 , 2024
Ice Water: ஐஸ் வாட்டர் குடிப்பதால் மாரடைப்பு ஏற்படலாம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சீன மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது. பொதுவாகவே தண்ணீர் இன்றி உலகில் உயிர்வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. மனிதனின் உடல் இயக்கத்திலும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நீர் இன்றியமையாதது. தண்ணீர் மனிதன் உயிர்வாழ தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்று. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த உயிர்காக்கும் […]

You May Like