fbpx

ADMK | ’யாரும் எதிர்பார்க்கல’..!! ’டாப் பதவியை கேட்கும் பாமக’..!! எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி..!!

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சிறிய கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கின்றன. இந்த இரு கட்சிகளும் தேமுதிக, பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இணைய 2026ஆம் ஆண்டில் துணை முதல்வர் பதவியளிக்க வேண்டும் என்று பாமக நிபந்தனை விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக முன்னேற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுக தற்போது வரை எந்த முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது. பாமகவுடன் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். ஆனால், 7 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் துணை முதல்வர் பதவி ஆகியவற்றை பாமக கேட்பதால், இழுபறி நீடிக்கிறது.

Read More : Kilambakkam | இனி ரூ.40 இருந்தால் போதும்..!! கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! புதிய வசதி அறிமுகம்..!!

Chella

Next Post

Modi: உலகின் முதல் வேத கடிகாரம் இன்று திறப்பு!… அம்சங்கள் என்ன தெரியுமா?

Fri Mar 1 , 2024
Modi: மத்திய பிரதேசத்தில் பண்டைய இந்திய பாரம்பரிய பஞ்சாங்கத்தின் (நேர கணக்கீட்டு முறை) படி நேரத்தை காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் வேத கடிகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 9 நாள் விக்ரமோத்சவ் இன்று தொடங்குகிறது. இந்தநிலையில் உஜ்ஜயினியின் ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள 85 அடி கோபுரத்தில் ‘விக்ரமாதித்ய வேதக் கடிகாரம்’ நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது உலகின் முதல் வேத கடிகாரம் […]

You May Like