fbpx

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் அறிக்கை..! உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்…‌!

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கவும், ரூல் கர்வ் விதியினை ரத்து செய்யவும் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார் ‌

இதுகுறித்து ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், அணைப் பலப்படுத்தும் பணிகளுக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பை நல்கும் என்றும், அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், அணையின் நீர் மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனை 2014ஆம் ஆண்டு தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மூலம் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டு பெறப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பலமுறை முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்த் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியது. உடனே, கேரள முதலமைச்சர் , அணைக்கு அதிகப்படியான நீர் வரத்து உள்ளதால், அணை நீர் மட்டம் திடீரென உயர வாய்ப்புள்ளது என்றும், அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும், நீர் வரத்தை விட அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

Vignesh

Next Post

நாடாளுமன்றத்தில் இன்று மின்சார திருத்த மசோதா தாக்கல் : மின்வாரிய ஊழியர்கள் எதிர்ப்பது ஏன்?

Mon Aug 8 , 2022
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.. எனினும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கி வருகின்றன.. இந்நிலையில் இன்று மின்சாரத் திருத்த மசோதா அல்லது எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) மசோதா, 2022ஐ மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.. மின்சார விநியோகத் துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்வதையும், தொலைத்தொடர்பு […]
மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

You May Like