fbpx

DMDK-வை வளைத்து போடும் ADMK..!! எல்லாம் ஓகே தானாம்..!! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனவும் இரு கட்சிகளிடையே இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பாஜக, அதிமுக கூட்டணிகளில் எந்த கட்சிகள் இணையும் என்பது உறுதியாகவில்லை. பாமக, தேமுதிக, தமாகா ஆகியவை பாஜக மற்றும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

பாமகவைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 8 தொகுதிகள் தரக் கூடிய கட்சியின் கூட்டணிக்கு செல்ல தயாராக இருக்கிறது. இதனால் பாஜக தரப்பு 10 தொகுதிகள் வரை பாமகவுக்கு தர ஒப்புக் கொண்டுள்ளதாம். தேமுதிகவும் 6 அல்லது 7 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறதாம். ஆனால், பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை ஓகே சொல்லப்பட்டுள்ளதாம். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 அல்லது 8 தொகுதிகள் ஒதுக்க தயாராக இருக்கிறதாம். தற்போது தேமுதிகவுக்கும் 5 தொகுதிகளை அள்ளி கொடுக்க அதிமுக தயாராகிவிட்டதாம். தேமுதிக தரப்புடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைகளை மும்முரமாக நடத்தி வருகிறதாம்.

முன்னதாக லோக்சபா தேர்தலில் 14 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் கொடுத்தால்தான் கூட்டணி என அதிரடியாக நிபந்தனை விதித்தார் பிரேமலதா விஜயகாந்த். இந்த நிபந்தனைகளால் பாஜக, அதிமுக ஆடிப் போயின. இதனையடுத்தும் தாம் அப்படி எல்லாம் நிபந்தனை விதிக்கவே இல்லை என அந்தர் பல்டி அடித்தார். தேமுகவின் வாக்கு சதவீதம் என்பது நோட்டா அளவுக்கு கூட கிடையாதுதான். ஆனால், தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவால் ஏற்பட்ட அனுதாபம் அக்கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்த அடிப்படை களநிலவரத்தை புரிந்து கொள்ளாமலேயே பாஜக, அதிமுகவுடன் இன்னமும் “எதிர்க்கட்சி” என்ற நினைப்பில் பிரேமலதா விஜயகாந்த் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.

Read More : RIP | தமிழக அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை காலமானார்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல்..!!

Chella

Next Post

CM Stalin | அமைச்சர் பிடிஆரை தொழில்நுட்பத்துறைக்கு மாற்றியது ஏன்..!! முதல்வர் முக.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்..!!

Fri Feb 23 , 2024
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், பழனிவேல் தியாகராஜனை ஏன் தகவல் தொழிநுட்ப துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறித்து விளக்கம் அளித்தார். அதில், ”தகவல் தொழில்நுட்பத்தை முன்வைத்து நடைபெறும் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கக் கூடிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு என் பாராட்டுகளை […]

You May Like