fbpx

கீழே தவறி விழுந்த மணப்பெண்..!! மாப்பிள்ளை கொடுத்த ரியாக்‌ஷன்..!! அடுத்த நிமிஷமே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

திருமணம் நடந்து முடிந்து 3 நிமிடத்தில் ஒரு தம்பதி விவாகரத்து பெற்ற சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.

குவைத்தில் ஒரு ஜோடிக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அனைத்து எதிர்ப்பார்ப்புகளுடன் திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதி, திருமண நிகழ்ச்சிகள் முடிந்து அங்கிருந்து புறப்பட தயாராகினர். அப்போது, படிக்கட்டில் நடந்து வந்த மணப்பெண், கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது, கை கொடுத்து தாங்குவதற்கு பதிலாக மணமகன் ‘முட்டாள், பார்த்து நடக்கமாட்டாயா?’ என்று அனைவரது முன்னிலையிலும் மணப்பெண்ணை பார்த்து திட்டியுள்ளார். இது மணப்பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே இவ்வாறு அவமரியாதை செய்யும் கணவர், எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்வாரோ என்று நினைத்த மணமகள், உடனடியாக நீதிபதியை அணுகி, தனக்கு விவாகரத்து தருமாறு கேட்டுள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதியும் விவாகரத்து கொடுத்ததால், திருமணம் முடிந்து வெறும் 3 நிமிடங்களில் அந்த திருமண பந்தம் முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலானது. அதற்கு இணையவாசிகள் சிலர் ‘மரியாதை இல்லாத உறவுகள் ஆரம்பத்திலேயே முடிவடைந்துவிடும்’ என கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல், கடந்த 2004ஆம் ஆண்டில் பிரிட்டனில் திருமணம் முடிந்து வெறும் 90 நிமிடங்களில் ஒரு தம்பதி விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read More : இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமா சாப்பிடுறீங்களா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பாருங்க..!! அதிகம் சாப்பிட முடியாது..!!

English Summary

The incident of a couple getting divorced within 3 minutes of the wedding has become a topic of conversation.

Chella

Next Post

2050-க்குள் இந்தியாவின் 50% பகுதிகள்..!! ஐ.நா. சொன்ன பரபரப்பு தகவல்..!! என்ன தெரியுமா..?

Thu Jul 25 , 2024
According to the UN, the number of elderly people in India will double by the year 2050. Andrea Wojner, head of India for Population, said:

You May Like