கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது..
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது பன்றிகளை பாதிக்கும் மிகவும் ஆபத்தான வைரஸ் நோயாகும். இந்த தொற்று முதன்முதலில் ஆப்பிரிக்காவில் 1920 இல் விலங்குகளில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. பன்றிகளிடம் இருந்து இந்த வகை வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாது என்று விலங்குகள் நலத்துறை தெரிவித்துள்ளது..
எனினும் பாதிக்கப்பட்ட பன்றிகளுடம் தொடர்பு கொள்ளும் மனிதர்கள் மூலம் மற்ற பன்றிகளுக்கு இந்த வைரஸ் பரவக்கூடும்.. இந்த சூழலில் கேரளாவில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகளிலும் கண்காணிப்பை கடுமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளது..
மேலும் பிற மாநிலங்களில் இருந்து பன்றிகளை இறக்குமதி செய்ய கேரள அரசு தடை விதித்துள்ளது.. கடந்த வாரம் உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளன.. இந்த மாத தொடக்கத்தில் பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கேரள அரசு ஏற்கனவே கண்காணிப்பை கடுமையாக்கியது.