fbpx

4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இப்படி ஒரு பாதிப்பு..!! தமிழ்நாட்டில் அமலுக்கு வரும் இரவு நேர ஊரடங்கு..?

இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஐந்து அம்ச தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்தது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், நேற்று தமிழகத்தில் 102 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால், தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

Chella

Next Post

பால் கலப்படத்தை 30 வினாடியில் கண்டறியும் கருவி....! அசத்திய சென்னை ஐஐடி...! முழு விவரம் உள்ளே...!

Tue Mar 28 , 2023
பால் கலப்படத்தை கண்டறியும் கருவியை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது. சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், பால் கலப்படத்தை 30 வினாடிகளுக்குள் கண்டறியும் வகையில் முப்பரிமாண (3டி) காகித அடிப்படையிலான கையடக்க சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த பரிசோதனையை நம் வீடுகளிலேயே செய்து பார்க்க முடியும்.யூரியா, சலவை சோப்பு, சோப்பு, ஸ்டார்ச், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட், உப்பு உள்ளிட்ட கலப்படத்துக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை இதன் மூலம் கண்டறியலாம். பாலின் தூய்மையைக் […]

You May Like