காஜியாபாத்தின் கிராசிங் ரிபப்ளிக் காவல் நிலையப் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிராசிங் ரிபப்ளிக் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், கடந்த ஜூன் 6ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் பெண், தனது அக்கம்பக்கத்தில் வசிக்கும் ரவி என்ற ரவீந்திரன், தனது 17 வயது மகளை ஏமாற்றி அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
போலீசார் சிறுமியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சிறுமியின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கடத்தல், போக்சோ சட்டம் மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
மேலும், சிறையில் இருந்து வெளியே வந்த அவர், மீண்டும் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, அவரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Read More : ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அட்டையை ஆவணமாக பயன்படுத்தக் கூடாது..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!