மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் 288 வாக்குகளும், மசோதாவுக்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகியது. சுமார் 13 மணி நேரத்துக்கு மேல் தொடர் விவாதம் நடந்து இரவு 2 மணியளவில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
வக்பு திருத்த மசோதா, 2025
வக்பு வாரியங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதுடன், அவற்றின் நிர்வாகத்தை திறம்படச் செய்வதும் இந்த சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம். தற்போது, வக்பு வாரியத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் புதிய மசோதாவின் கீழ், இந்த வாரியத்தின் உறுப்பினர்கள் அரசாங்கத்தால் பரிந்துரை செய்யப்படுவார்கள்.
புதிய மாற்றத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் வக்பு வாரியத்தில் உறுப்பினர்களாகலாம், குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருப்பது கட்டாயம். இது தவிர, வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம் என்று இந்த புதிய மசோதா முன்மொழிகிறது. வக்புக்கான சட்டத் திருத்தத்தை, வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசாங்கம் செய்கிறது. எனினும், இந்தியாவின் முஸ்லிம் சமூகமும், எதிர்க்கட்சிகளும் இதை கடுமையாக எதிர்த்தனர்.