மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே வைகை நகர் திருமகள் தியேட்டர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி தனலட்சுமி. 47 வயதாகிறது. இவர்களது மகன் பிரேம்குமார் (30). இவர், கோவை சீரநாயக்கன் பாளையத்தில் ராதாகிருஷ்ணன் தெருவில் தங்கியிருந்து எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். கடைசியாக கோவை நேதாஜி ரோட்டில் உள்ள தியேட்டரில் வேலை பார்த்துள்ளார்.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ரக்ஷ்னி என்ற பெண்ணுக்கும் பிரேம்குமாருக்கும் காதல் ஏற்பட்டது. இருவருமே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், பிரேம்குமார் ரக்ஷ்னிக்கு தெரியாமல் கவிதா என்ற பெண்ணையும் காதலித்து வந்திருக்கிறார். கவிதா ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்கிறார். கவிதாவிடம் பிரேம்குமார் தான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிப்பதை மறைத்துள்ளார்.
இதற்கிடையே ரக்ஷ்னிக்கு தெரியாமல் கவிதாவை அடிக்கடி பிரேம்குமார் சந்தித்து வந்துள்ளார். இது நீண்ட நாட்களாக ரக்ஷ்னிக்கு தெரியாமல் இருந்தது. அடிக்கடி காதலி ரக்ஷ்னியை மதுரைக்கு அனுப்பி வைத்து விட்டு பிரேம்குமார் கவிதாவுடன் கோவையில் உள்ள வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் தான், காதலிகள் இருவருக்கும் பிரேம்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டது. தங்களுடன் இருக்கும் போதே செல்போனில் தனியாக சென்று பேசுவது குறித்து தனித் தனியே இருவரும் கேள்வி கேட்டுள்ளார்.
ஆனால், பிரேம்குமார் இருவரையும் சமாளித்து வந்துள்ளார். ஆனால், பிரேம்குமாரின் இந்த காதல் இரு காதலிகளுக்கும் தெரியவந்தது. இதனால் பிரேம்குமாரை இருவரும் கேள்வி கேட்டுள்ளனர். இதன் மூலம், தனது தில்லாலங்கடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், ரக்ஷ்னியுடன் செல்போனில் பேசிய பிரேம்குமார் “நீ வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ் என்று” கூறிவிட்டு பிரேம்குமார் போனை துண்டித்து விட்டார். இதனால் மீண்டும் பிரேம்குமாரை ரக்ஷ்னி தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரக்ஷ்னி மற்றும் கவிதா ஆகியோர் பிரேம்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டை திறந்து பார்த்தபோது, பிரேம்குமார் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்தும் இரு காதலிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், போலீசார் பிரேம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : ’ஆசையா பேசுனாரு’… ’நானும் அதுக்கு ஒத்துக்கிட்டேன்’..!! ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் கர்ப்பமான பிளஸ்2 மாணவி..!!