fbpx

உல்லாசத்திற்கு பிறகு தொல்லை கொடுத்த கள்ளக்காதலி..!! காட்டுப்பகுதிக்குள் வைத்து கதையை முடித்த வாலிபர்..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம்முனியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவருக்கு திருமணமாகி முதல் மனைவி பூங்கொடி (28) மற்றும் 2-வது மனைவி மணிமேகலை (25) என இருவர் உள்ளனர். ரமேஷின் முதல் மனைவி பூங்கொடிக்கு 2 குழந்தைகளும், மணிமேகலைக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். ரமேஷ் வாரத்தில் 5 நாட்கள் முதல் மனைவி வீட்டிலும், 2 நாட்கள் 2-வது மனைவி வீட்டிற்கும் வந்து சென்றுள்ளார். இதற்கிடையே, 2-வது மனைவி மணிமேகலைக்கு பாலசுப்பிரமணியம் (எ) பாலாஜியுடன் (27) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பாலாஜிக்கு திருமணமாகி கௌசல்யா (24) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மணிமேகலை பாலாஜிக்கு இடையே உள்ள நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இந்த விவகாரம் கணவர் ரமேஷ்க்கு தெரியவந்தது அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். தொடர்ந்து ரமேஷ் மணிமேகலையை திட்டியதாகவும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், மணிமேகலை பக்கத்து வீட்டை சேர்ந்த பாலாஜியை அழைத்துக் கொண்டு ஆத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு மேலாக குடித்தனம் நடத்தி வந்த நிலையில், பாலாஜி முதல் மனைவி வீட்டிற்கு சென்றதாலும், சரியாக மணிமேகலை பார்க்க வராததாலும், பணம், உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மணிமேகலை பாலாஜிக்கு தொடர்பு கொண்டு தான் ராசிபுரம் வருவதாகவும் தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். ராசிபுரம் வந்த மணிமேகலையை இருசக்கர வாகனத்தில் பாலாஜி அழைத்துக் கொண்டு பட்டணம் ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். ஏரிக்கரையில் இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில், அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது மணிமேகலை என்னை உன்னுடனே அழைத்துச் சென்றுவிடு என பலமுறை கேட்டதாகவும் அதற்கு பாலாஜி மறுத்து ஆத்திரமடைந்த நிலையில், அருகாமையில் இருந்த கல்லை எடுத்து மணிமேகலை தலையில் 3 முறை அடித்துள்ளார். இதில் மணிமேகலை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து பாலாஜி தனது இருசக்கர வாகனத்தில் பட்டணம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் 1 லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கொண்டு மணிமேகலை உடல் முழுவதும் ஊற்றி பற்றவைத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் மறுநாள் காலையில் மாடு மேய்ப்பதற்காக சென்ற நபர், சடலத்தை கண்டு ராசிபுரம் காவல்துறையினர்க்கு தகவல் தெரிவித்தார். பின்னர், காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பாலாஜி கொலை செய்துவிட்டு சேலம் சென்று விட்டு மீண்டும் பணம் இல்லாத காரணத்தால் தனது தாய், தந்தையிடம் பணம் வாங்குவதற்காக ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது போலீசுக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் பட்டணம் பிள்ளையார் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பாலாஜியை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், பாலாஜி கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More : விவசாயிகளே செம குட் நியூஸ்..!! இனி உங்கள் நிலத்திற்கு ஆதாரம் இதுதான்..!!

English Summary

Balaji asked Manimekala several times to take me with him and when Balaji refused and got angry, he took a nearby stone and hit Manimekala on her head 3 times.

Chella

Next Post

செம குட் நியூஸ்..!! மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்..!! ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடக்கம்..!! முதல்வர் அறிவிப்பு..!!

Wed Jul 31 , 2024
Chief Minister Mukherjee Stalin has announced that the Tamil Pudhalvan project will be launched on August 9 in Coimbatore.

You May Like