fbpx

ஜி 20 மாநாடு முடிந்ததும் உதயநிதிக்கு செக் வைக்கும் டெல்லி..!! வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என்றார்.

அவரின் பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜகவினர் பலரும் அவரின் பேச்சால் அரண்டு போய் உள்ளனர். அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் வர தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில்தான் அமைச்சர் உதயநிதிக்கு உரிய பதிலடி தர வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

உதயநிதியின் சனாதன கருத்து குறித்து பதிலடி கொடுக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை வழங்கி இருக்கிறார். எந்த மதத்தையும் தவறாக பேசக்கூடாது. சனாதன தர்மத்தை யாரேனும் தவறாக பேசினால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய அரசியலில் திமுக கவனம் பெற்றுள்ள நிலையில், தற்போது திடீரென பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் திமுகவை குறிவைக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில்தான் ஜி 20 மாநாட்டிற்கு பிறகு பாஜகவினர் உதயநிதி ஸ்டாலினை குறிவைக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மாநாடு நடக்கும் சமயத்தில் நாட்டில் போராட்டங்கள், மோதல்கள் நடந்தால் சரியாக இருக்காது. அதனால், கூட்டம் முடிந்த பின் திங்கட் கிழமையில் இருந்து போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

’இந்தாம்மா ஏய்’..!! விடைபெற்றார் மாரிமுத்து..!! சொந்த ஊரில் உடல் தகனம்..!! சோகத்தில் திரையுலகம்..!!

Sat Sep 9 , 2023
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார் மாரிமுத்து. இவர் இல்லை என்றால் அந்த சீரியலே இல்லை என சொல்லும் அளவிற்கு தனது கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்தார். ஏய் இந்தாம்மா என அதட்டலாக பேசும் வசனம் பட்டித்தொட்டியெங்கும் வைரலானது. இந்நிலையில், நேற்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு வியர்த்துள்ளது. இதனால், வந்துவிடுகிறேன் என கூறிவிட்டு வெளியே வந்த […]

You May Like