fbpx

மொராக்கோ நிலநடுக்கத்திற்குபின் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அதிகரிப்பு!… ஆய்வில் அதிர்ச்சி!

மொராக்கோ நிலநடுக்கத்திற்கு பிறகு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.

மொராக்கோ நாட்டில் கடந்த 8ம் தேதி ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2900ஐ தாண்டியுள்ளது. வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் உள்ள மாறாக்கிரிட்ச் நகரில் கடந்த 8ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்மேடாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 1000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் மேலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்த நிலையில், ஆதரவற்ற இளம் பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு, கிராமப் பகுதிகளுக்கு படையெடுக்கின்றனர். சமூக ஊடகங்களில் ஆண்கள் பலர், ஆதரவற்ற பெண்களைத் திருமணம் செய்து கொள்ள தயார் என விளம்பரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் நோக்கில் பயணப்படுவதாக குறிப்பிட்ட 20 வயது மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இப்படியான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மகளிர் அமைப்புகள் கோரிக்கை முன்வைத்து வருகின்றன.

சிறார்கள் பலர் ஆபத்தான சூழலில் சிக்காமல் இருக்க, மொராக்கோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதுகாப்பு அளிப்பதாக கூறி, வேறு நாடுகளுக்கு சிறார்களை கடத்தும் செயலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்திற்கு பிறகு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது. அப்படியான சூழலில் சிக்கும் சிறார்கள் அல்லது பெண்களுக்கு ஆலோசனை அல்லது சேவையை வழங்கும் அமைப்புகள் ஏதும் மொராக்கோவில் இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மொராக்கோவை நோக்கி தங்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஜிமெயில், மேப்ஸ் மற்றும் யூடியூப்பில் கூகுள் சாட்பாட் பார்ட் அறிமுகம்!... எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Wed Sep 20 , 2023
கூகுள் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை, ஜிமெயில், மேப்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்டவற்கு அறிமுகம் செய்துள்ளது. ஓபன் ஏஐ மற்றும் மைக்ரோசாப்ட்டின் தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய போட்டி அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் கூகுள் நிறுவனத்தின் சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான பார்ட் என்னும் சாட்பாட்டை அறிமுகம் செய்தது. பாரட் சேவையை ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் மேப், யூ டியூப் உள்ளிட்ட இணைய தளங்களிலும் பயன்படுத்தும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. […]

You May Like