தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் முடிந்த நிலையில், பெண் நிர்வாகிகளோடு அமர்ந்து விஜய் உணவு அருந்தினார்.
விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று முடிந்தது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழுவில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். ஒவ்வொரு குடும்பமும் வாழ வேண்டுமென்பது நல்ல அரசியலா..? இல்லை ஒரு குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என்பது நல்ல அரசியலா..? திராவிட மாடல் என்று கூறி மக்கள் பிரச்சனைகளை திமுக மடைமாற்றி வருகிறது. மாண்புமிகு மன்னாராட்சி முதல்வரே..!! மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே..!! பெயரை மட்டும் வீராப்பா சொன்னா போதாது. என் கட்சி தொண்டர்களை பார்க்க தடை போட நீங்கள் யார்..? மக்களை சந்திக்க எனக்கு தடை விதிக்க நீங்கள் யார்..?” என்று பேசினார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் முடிந்த நிலையில், பெண் நிர்வாகிகளோடு அமர்ந்து விஜய் உணவு அருந்தினார். காலை உணவாக உறுப்பினர்களுக்கு பொங்கல், வடை, சட்னி, சாம்பார், டீ வழங்கப்பட்ட நிலையில், மதிய உணவாக வெஜ் மட்டன் பிரியாணி, சாதம், சைவ மீன் குழம்பு, சாம்பார், மிளகு ரசம், உருளை பட்டாணி வறுவல், தயிர் வடை, அப்பளம், வெத்தலை பாயாசம், இறால் 65, இஞ்சி துவையல், தயிர் பச்சடி, சப்பாத்தி+ பன்னீர் பட்டர் மசாலா, அவியல், பகோடா, மோர், ஐஸ்கிரீம், ஆனியன் மணிலா, மால் பூவா ஸ்வீட், வெஜ் சூப், ஊறுகாய் ஆகிய உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது.