fbpx

விஜய்யை தொடர்ந்து இன்று கட்சியின் பெயரை அறிவிக்கிறார் நடிகர் விஷால்..!! இவருடைய இலக்கும் சட்டப்பேரவை தேர்தலா..?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தற்போது முன்னணி நடிகர் ஒருவரும் அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளார். அவர் ஏற்கனவே அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று அறிவிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷாலும் விஜய்யை போல் நாடாளுமன்றத் தேர்தலில் பார்வையாளராக இருப்பார் என்றும் வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அவருடைய கட்சி போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஷாலின் கட்சியாவது இலக்கண பிழை, எழுத்து பிழை இல்லாமல் இருக்குமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Chella

Next Post

IPC Section 206.? 'BharatPe' நிறுவனத்திற்கு, கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ்.!

Wed Feb 7 , 2024
ஃபின்டெக் யூனிகார்ன் பாரத்பே(BharatPe) நிறுவனத்திற்கு, அதன் நிறுவனர் அஷ்னீர் குரோவர் மீது, நிறுவனம் எடுத்த சட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைக் கேட்டு, கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் நிறுவனச் சட்டத்தின் 206வது பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் குரோவருக்கு எதிரான சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களையும் கேட்டு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து பாரத்பே அளித்த அறிக்கையில், “நிறுவனங்களின் பதிவாளரிடமிருந்து, எங்கள் நிறுவனத்திற்கு சில தகவல்கள் தேவைப்படுகின்றன. […]

You May Like