fbpx

இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின் தள்ளிய ஷ்ரத்தா கபூர்..!! ஒரே படத்தில் குவிந்த ஃபாலோயர்ஸ்!!

இந்தியாவில் உள்ள பிரபலங்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர்களைக் கொண்டவர்கள் என்றால் அதில் விராட் கோலியின் பெயரும் பிரியங்கா சோப்ராவின் பெயரும் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றது. இது மட்டும் இல்லாமல் இந்த வரிசையில் பிரதமர் மோடி மூன்றாவது இடத்தில் இருந்தார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 271 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவருக்கு அடுத்த இடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 91.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் 91.3 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டு பிரதமர் மோடி இருந்தார். ஆனால் தற்போது அவர் நான்காவது இடத்திற்குச் சென்றுள்ளார். மூன்றாவது இடத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இருக்கிறார். அவர் தற்போது 91.4 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்வோர் கொண்ட பட்டியலில் விராட் கோலி, பிரியங்கா சோப்ராவிற்கு பிறகு ஷ்ரத்தா கபூர் இடம்பெற்றுள்ளார். 

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் ஸ்ட்ரீ 2. இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஸ்ட்ரீ படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன பாலிவுட் படங்களில் அதிக வசூலைக் குவித்து பாக்ஸ் ஆஃபீஸ் வின்னராக இந்தப் படம் மாறியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி மூலம், இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் நடிகை ஷ்ரத்தா கபூர்.

Read more ; விஜய்யின் தவெக கட்சிக் கொடியில் இடம்பெறும் வாசகம்..!! என்ன தெரியுமா..?

English Summary

After Virat Kohli and Priyanka Chopra, Shraddha Kapoor is the most followed on Instagram.

Next Post

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..!! பூமி திரும்புவது எப்போது? - இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம்..!!

Wed Aug 21 , 2024
Sunita Williams in space..!! When will the earth return? - ISRO Chief Somnath Explanation

You May Like