fbpx

கலங்காதே ராசா!! மனம் உடைந்த ரோஹித் சர்மா.. தேற்றிவிட்ட விராட் கோலி! ; இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

நேற்றைய போட்டிக்கு பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் கண் கலங்கிய ரோஹித் சர்மாவை  விராட் கோலி தேற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டன.

அரையிறுதியின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.  முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் தென்னாப்பிரிக்கா வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 56 ரன்களை மட்டுமே பெற்றனர்.  இதன் பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களிலேயே வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக கால் பதித்துள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவும் இங்கிலாந்து அணிகளும் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.  அதன்படி இந்திய அணி முதலாவதாக களமிறங்கி பேட்டிங் செய்தது. இந்த போட்டியில், 16.4ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 103ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 68ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி ட்ரெஸ்ஸிங்க் ரூமுக்கு வருகை தந்தபோது சக வீரர்கள் உள்ளே நுழைந்து கொண்டிருக்க ரோஹித் சர்மா அறையின் வெளியே அமர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மா திடீரென கண் கலங்குவது போன்ற காட்சிகளும் அருகில் சென்ற விராட் கோலி அவரை தேற்றுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read more ; Breaking: ஏர்டெல் நிறுவனம் தொலைபேசி கட்டணம் உயர்த்துவதாக அறிவிப்பு…!

English Summary

After India sealed their berth for the title clash against South Africa, skipper Rohit Sharma, who scored a brilliant 57 off 39 balls, became emotional over the win.

Next Post

இந்தியன் 2 திரைப்படம்..!! கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? ரூ.150 கோடியா..? உண்மை என்ன..?

Fri Jun 28 , 2024
It has been reported that Kamal Haasan has been paid Rs 150 crore to act in Indian 2.

You May Like