fbpx

40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்..!! குடியரசு தின விழாவுக்கு சாரட் வண்டியில் வந்த ஜனாதிபதி..!!

இந்திய குடியரசு தின விழாக்களுக்கு 1984ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்த ‘சாரட் வண்டி’ அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டது. இன்று நாட்டின் 75-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக, தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு, அணிவகுப்பைக் காண பிரதமர் கடமை பாதைக்கு (கர்தவ்யா) பாதையில் உள்ள மேடைக்கு சென்றார். அப்போது ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அணிவகுப்புக்காக பாரம்பரிய “சாரட் வண்டி” ரதத்தில் கடமை (கர்தவ்யா) பாதையில் பயணித்து வந்தனர். இந்த சாரட் வண்டி 40 வருட இடைவெளிக்குப் பிறகு இந்த 75-வது குடியரசு தினத்தில் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

1984ஆம் ஆண்டு வரை குடியரசு தின விழாக்களில் பயன்படுத்தப்பட்டு வந்த குடியரசுத் “சாரட் வண்டி” அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக இது நிறுத்தப்பட்டது. பின்னர் ஜனாதிபதிகள் பயணத்திற்கு லிமோசின்களைப் (சொகுசு வாகனங்கள்) பயன்படுத்தத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

சென்னை வந்தடைந்தது பாடகி பவதாரிணியின் உடல்..!! சொந்த ஊரில் இறுதிச்சடங்கு..!!

Fri Jan 26 , 2024
பிரபல பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 47 வயதான பவதாரிணி, கடந்த சில மாதங்களாக இலங்கையில் இயற்கை முறை சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் இலங்கை சென்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இவரது இந்த திடீர் மறைவுச் செய்தியை அறிந்து திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]

You May Like