டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொடூர படுகொலைக்கு பின்னர், அவரது உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் போன்ற சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து காணப்படுகின்றன. அதே போல் ஒரு சம்பவம் தற்போது ஜார்கண்டில் நடந்துள்ளது.
ஜார்க்கண்டின் சாகேப்கஞ்ச் நகரில் நாய்கள் மனித இறைச்சியை உண்பதை பார்த்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் 12 துண்டுகளை கண்டுபிடித்துள்ளனர். அந்த உடலின் தலை பாகங்கள் கிடைக்கவில்லை என்றும், கூறிய ஆயுதங்களால் வெட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்டுகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் 22 வயது ரூபிகா பகதீன் என்பவர் என்று தெரிய வந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் போரியா போலீஸ் எல்லைக்குட்பட்ப சாகிப்காஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ரூபிகா அவரது கணவர் தில்தார் அன்சாரி, இவர்களுக்கு சில தினங்களுக்கு முன் தான் திருமணம் நடந்துள்ளது, தில்தார் அன்சாரி ஏற்கனவே திருமணமானவர், ஆனால் அவர் பழங்குடியினத்தை சேர்ந்த 22 வயது நிரம்பிய ரூபிகாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதால் ரூபிகாவை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ரூபிகாவை வீட்டில் காணவில்லை என்று கணவர் தில்தார் அன்சாரி தெரிவித்துள்ளார், இதை அறிந்த ரூபிகாவின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் தான் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறத்தில் போலீசார் 12 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை கைப்பற்றி அது ரூபிகா என்று கூறியுள்ளனர்.
தில்தார் அன்சாரியின் 2வது மனைவி ரூபிகா என்பதால் இதுவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ரூபிகாவை கொன்று 18 துண்டுகளாக்கி சிலவற்றை சாக்கு பைகளிலும் சிலவற்றை வெளியே வீசியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.மேலும் குற்றம் சாட்டப்பட்ட தில்தார் அன்சாரியின் தாய் மாமாவிடம் இருந்து இரண்டு கூரிய ஆயுதங்களை போலீசார் கண்டுபிடித்தனர். முக்கிய குற்றவாளி, தற்போது இறந்தவரின் கணவர் என்றும் விசரனை இன்னும் தெடர்ந்து கொண்டு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.