fbpx

உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு கொடூரம்.. பலாத்காரம் செய்து தெருவில் நிர்வாணமாக அனுப்பிய இளைஞர்கள்

உத்தரபிரதேசத்தில் 4 இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு 15 வயது சிறுமியை தெருவில் நிர்வாணமாக அனுப்பி வைத்த கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் மொராதாபாத்மாவட்டத்தில் போஜ்பூரைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. கடந்த செப்டம்பர் 1ம் தேதி பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த 4 இளைஞர்கள் சிறுமியை மிரட்டி ஆடையை களைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் 4 பேரும் ஆடையை கொடுக்காமல் அந்த மாணவியின் ஊரில் இறக்கி விட்டுவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி ஆடையில்லாமல் அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த தகவலை இதுவரை அந்த பெண்ணின் பெற்றோர் தரப்பில் இருந்து யாரும் புகார் அளிக்கவில்லை. இந்நிலையில் சமூக வலைத்தலத்தில் அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் 15 வயது பெண் அவர் வீட்டுக்கு நிர்வாணமாக நடந்து செல்வது பதிவாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது அன்று நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது பற்றி பெற்றோரிடம் காவல்துறை கண்காணிப்பாளர் விசாரித்தபோது என் மகளுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை எனக் கூறி மறுத்துள்ளனர். வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 3 பேர் தலைமறைவாக உள்ளதாக போலீசரர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

Next Post

துப்பாக்கியுடன் அஜித்..!! ‘ஏகே 61’ படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!

Wed Sep 21 , 2022
நடிகர் அஜித்தின் ‘ஏகே 61’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘ஏகே 61’. இப்படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அஜய், சிபி சந்திரன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மிக நீண்ட நாட்களாக […]
லண்டனுக்கு குடிபெயரும் நடிகர் அஜித்..!! கோடிகளில் வீடு வாங்கியது இதற்கு தானாம்..!!

You May Like