24 வயது பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளப்போகும் பப்லு பிரித்விராஜ் காதலிக்க வயது தடையில்லை என்று யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த பிரித்விராஜ் பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்களை கவர்ந்தவர். மர்மதேசம் போன்ற பிரபல சீரியல் மூலம் இவர் பிரபலமானார். 1971ம் ஆண்டு நான்கு சுவர்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதையடுத்து சிவாஜி , ரஜினி போன்ற நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
மேலும் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள பப்லு ப்ரித்விராஜ் கடந்த 1994-ம் ஆண்டு பீனா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆஹத் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பப்லு ப்ரித்விராஜ் தனது மகனை சிறப்பான முறையில் கவனித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையெ கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த சில வருடங்களாக கணவன் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே தற்போது 56 வயதாகும் பப்லு ப்ரித்விராஜ் 23 வது பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 வயதில் மகன் உள்ள நிலையில் தனது மகனை விட சிறிய பெண் ஒருவரை பப்லு திருமணம் செய்துகொள்வதாக தகவல் வெளியானது.
சில பத்திரிகைகளில் திருமணம் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டது. மலேசியாவை சேர்ந்தவர் எனவும் பல வதந்திகள் வெளி வந்த நிலையில் தற்போது பிரபல யூடியூப் சேனலுக்கு ஜோடியாக பங்கேற்று பேட்டி அளித்துள்ளார். ’ முதல் முதலில் நாங்கள் பெங்களூருவில் சந்தித்தோம். இவர் மலேசியாவை சேர்ந்தவர்அல்ல ஆந்திராவை சேர்ந்தவர். வயதான ஆள் , சிறிய வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. நான் 100 வயது கிழவன் கிடையாது. இவரும் 16 வயது கிடையாது. என்னைப் பொறுத்தவரை காதலுக்கு வயது தடை இல்லை. நிறைய பேர் எங்களுக்கு அன்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். ’ என தெரிவித்தார்.
ஆந்திராவைச் சேர்ந்த பெண் கூறுகையில் , ’ பெங்களூருவில் அவர் யார் என்றே தெரியாத ஒரு நிலையில்தான்அவரை சந்தித்தேன். பின்னர் சென்னையில் இருவரும் சந்தித்தோம். பின்னர்தான் இவர் நடிகர் என தெரிந்தது ’ என்றார்.
என்னுடன் பழகி என் குணத்தை அவர் ரசித்தார். நடிகர் மாதிரி இல்லாமல் சாதாரண நபர் போலவே பழகினார். இதுதான் அவரிடம் காதலிக்க என்னை தூண்டியது. வயது விவகாரத்தில் எங்களுக்குள் நிறைய முறை பிரச்சனை வந்துள்ளது. வயது என்பது ஒரு எண் என நீங்கள்தானே கூறினீர்கள் இப்போது என்ன பிரச்சனை என பல முறை நாங்கள் விவாதித்து யோசித்த பின்னரே காதலை வெளிப்படுத்திக்கொண்டோம். என தெரிவித்தனர்.