fbpx

பாலியல் உறவுக்கு வயது வரம்பு 16!… புதிய சீர்திருத்தங்களை கொண்டுவந்த பிரபல ஆசிய நாடு!… முழுவிவரம் இதோ!

பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயது வரம்பை ஜப்பான் 16-ஆக உயர்த்தியுள்ளது. இந்த புதிய சீர்திருத்தத்தின் மூலம், 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் உறவுகொள்வது பலாத்காரமாக கருதப்படும் என்று ஜப்பான் நாடாளுமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.

ஜப்பான் நாடாளுமன்ற மேல்சபையில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. மனித உரிமை அமைப்புகள் இந்த சீர்திருத்தத்தை வரவேற்றுள்ளதுடன், நாட்டின் நீதி நிர்வாகத்தில் இது ஒரு பெரிய முன்னேற்றம் என்றும் கூறியுள்ளது. முன்னதாக, ஜப்பானில் உடலுறவுக்கு சம்மதிக்கும் வயது வரம்பு 13-ஆக இருந்தது. அதாவது, ஆணோ பெண்ணோ 13 வயது ஆகிவிட்டால் அவர்களுக்கு சம்மதத்துடன் உடலுறவு கொள்வதற்கு சுதந்திரம் உண்டு. இந்நிலையில், பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயது வரம்பை ஜப்பான் 16-ஆக உயர்த்தியுள்ளது. இந்த புதிய சீர்திருத்தத்தின் மூலம், 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் உறவுகொள்வது பலாத்காரமாக கருதப்படும் என்று ஜப்பான் நாடாளுமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.

அனுமதியின்றி பாலியல் சுரண்டல் படங்களை படமாக்குதல், விநியோகம் செய்தல் மற்றும் வைத்திருப்பதையும் இந்த சட்டம் தடை செய்கிறது. சிறார்களுக்கு எதிராக பெரியவர்கள் செய்யும் பாலியல் துஷ்பிரயோகம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற செய்தியை சமூகத்திற்கு அனுப்ப இந்த சீர்திருத்தம் உதவும் என்று மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்துள்ளன. புதிய சட்டத்தின் கீழ், 13 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு கொள்வது சட்டவிரோதமானது, அதே சமயம் 13 முதல் 15 வயதுடைய நபருடன் உறவுகொள்ளும் பட்சத்தில் குற்றவாளி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருந்தால் தண்டிக்கப்படுவார், இருவருக்குமான வயது வித்தியாசம் ஐந்து வயதுக்கு உட்பட்டு இருந்தால் அவர் அவருக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

1907 முதல், ஜப்பானில் உடலுறவுக்கான குறைந்தபட்ச வயது 13 ஆக இருந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டத்தை சீர்திருத்த வேண்டும் என்று கோரி வந்தநிலையில், இப்போது இந்த மற்றம் வந்துள்ளது. சம்மதத்துடன் பாலுறவுக்கான வயது வரம்பு நாட்டிற்கு நாடு மாறுபடும். வயது வரம்பு பிரித்தானியாவில் 16 ஆகவும், ஜேர்மனி மற்றும் சீனாவில் 14-ஆகவும் உள்ளது. இந்தியாவில் இது 18-ஆகவும் உள்ளது.

Kokila

Next Post

ஈரோடு மக்களுக்கு ஓர் அரியவாய்ப்பு!... அர்ச்சகர் பணிக்கு ஆட்கள் தேவை!... 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!... விவரம் இதோ!

Sun Jun 18 , 2023
ஈரோடு அருகே உள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு அருகே உள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் அர்ச்சகர், சீட்டு விற்பனையாளார், இரவுக்காவலர், திருவலகு ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. கல்வி மற்றும் பிற தகுதிகள்: அர்ச்சர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப்பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் […]

You May Like