மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது. மத்திய ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதலில் வயது அடிப்படையில் ஓய்வூதியத்தில் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வு பெற்ற மத்திய அரசு சிவில் சர்வீஸ் ஊழியர்கள் இனி கூடுதல் ஓய்வூதியம் பெறுவார்கள்.
ஓய்வூதிய விதிகள் 2021 படி, 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஓய்வூதியமும் கருணை உதவித் தொகையும் பெறலாம்.
*80 முதல் 85 வயது வரையிலானவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 20% கூடுதல் வழங்கப்படும்.
*85 முதல் 90 வயதினவர்களுக்கு 30% கூடுதல் கிடைக்கும்.
*95 முதல் 100 வயதினவர்களுக்கு 50% கூடுதல் வழங்கப்படும்.
*100 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 100% கூடுதல் பெறுவார்கள்.
இந்த கூடுதல் ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட வயதை அடையும் முதல் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தால் பல பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.