தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கி 25 நாட்கள் நீடிக்கும். அக்னி நட்சத்திர நாட்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.