fbpx

அக்னி நட்சத்திரம்..!! நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

நடப்பாண்டில் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. மே மாதம் துவங்கி விட்ட நிலையில், நாளை முதல் (மே 4) அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெப்பம் இந்த ஆண்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கும். பின்னர் படிப்படியாக அதிகரித்து மே மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகும். அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் மே மாதத்தில் தொடங்கும். ஆனால், நடப்பாண்டு பிப்ரவரி இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. இன்னும் சொல்லப்போனால் ஏப்ரல் மாதத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. ஈரோடு, சேலம், கரூர், தருமபுரி, மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

அக்னி நட்சத்திர வெயில் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் இவ்வளவு கொடூரமாக இருக்கிறது. மே மாதம் எப்படி இருக்குமோ என மக்கள் புலம்பாத குறைதான். தற்போது மே மாதமும் தொடங்கிவிட்ட நிலையில், நாளை அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ளது. அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் கோடை வெயில் உச்சத்தை தொடும். இந்த வெயில் காலம் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் என்பதை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தாவிட்டாலும் மே மாதத்தின் இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, இந்த கால கட்டத்தில் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதோடு அனல் காற்றுடன் அதிகபட்ச வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பழங்களில் ஏன் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது..? இது தெரிந்தால் இனி வாங்க மாட்டீங்க..!!

Wed May 3 , 2023
பழக்கடைகளில் ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களுக்கு மேல் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். ஆனால், அதற்கு என்ன காரணம் என்று பலருக்கும் தெரியாது. இருப்பினும் அதை நாம் பெரிதாக கவனிக்காமல் கடந்து சென்றுவிடுவோம். ஆனால் அதற்கு பின் ஒரு காரணம் உள்ளது என்பது தெரியுமா..? பழங்களில் உள்ள இந்த ஸ்டிக்கர்கள் தரத்தை குறிப்பதற்காக ஒட்டப்படலாம் என்று பலர் நினைக்கிறார்கள். அதுமட்டுமின்றி, இந்தப் பழங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் […]
பழங்களில் ஏன் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது..? இது தெரிந்தால் இனி வாங்க மாட்டீங்க..!!

You May Like