fbpx

அக்னிவீரர் ஆட்சேர்ப்பு.. ஆன்லைன் தேர்வு பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.. ராணுவ அதிகாரி தகவல்..

அக்னிவீரர் ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை என ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு பாதுகாப்பு படைகளில் ஆட்சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்தை அறிவித்தது.. இதன் கீழ் 17 மற்றும் ஒன்றரை வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆயுதப் படைகளில் 4 ஆண்டுகள் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், அவர்களில் 25 சதவீதம் பேர் தொடர்ந்து ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அரசு கூறியது.. புதிய திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் இளைஞர்கள் ‘அக்னிவீர்’ என்று அழைக்கப்படுவார்கள்.

இதனிடையே இந்திய ராணுவம் சமீபத்தில் ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 3 கட்டங்களாக ஆட்சேர்ப்பு நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், ஆன்லைனில் பதிவுசெய்து விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் CEE என்ற ஆன்லைன் பொது நுழைவு தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். 2-வது கட்டத்தில், பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள், அந்தந்த ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகங்களால் தீர்மானிக்கப்பட்ட இடத்தில் ஆட்சேர்ப்பு பேரணிக்கு அழைக்கப்படுவார்கள்.. பின்னர் உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இறுதியாக, 3-ம் கட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இந்நிலையில் இந்த ஆட்சேர்ப்பு நடைமுறையின், ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வுக்கு (CEE) பயன்படுத்தப்படும் பாடத்திட்டத்திலோ அல்லது சோதனை முறையிலோ எந்த மாற்றமும் இல்லை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்திய ராணுவத்தின் ஆள்சேர்ப்பு இயக்குநர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.சர்னா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, ” விண்ணப்பதாரர்களுக்கு உதவுவதற்காக ஆன்லைன் பொது நுழைவு தேர்வை முதல், செயல்முறையாக” நடத்த திட்டமிட்டுள்ளோ.. இது தொழில்நுட்பம் மற்றும் உடல் தகுதியுடைய இளைஞர்களை” இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதில் எளிதாக்கும்..

முன்னர் விண்ணப்பதாரர்கள் ஸ்கிரீனிங் செயல்முறைக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது, மேலும் பேரணிகளின் போது கூட அவர்களில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டியிருந்தது. இப்போது, ஆட்சேர்ப்பு செயல்முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கும் மட்டும் வாய்பு கிடைக்கும்..

இந்த ஆன்லைன் தேர்வு என்பது, ஆட்சேர்ப்பு செயல்முறையின் முதல் வடிகட்டுதல் நிலை ஆகும்.. ஆனால், பாடத்திட்டத்திலோ அல்லது தேர்வு முறையிலோ எந்த மாற்றமும் இல்லை என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன்… நாடு முழுவதும் 176 தேர்வு மையங்கள் ராணுவம் அடையாளம் கண்டுள்ளது, தேவைப்பட்டால் விரிவுபடுத்தலாம், மேலும் ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் 5 மையங்களை விண்ணப்பதாரர் தேர்வு செய்யலாம்.. இந்த 5 விருப்பங்களில், ஒரு மையம் ஒதுக்கப்படும்..

ஆன்லைன் நுழைவுத் தேர்வில் ‘பதிவு செய்வது எப்படி’ மற்றும் ‘எப்படி தோன்றுவது’ குறித்த கல்வி வீடியோக்கள், இந்திய ராணுவத்தில் சேரும் இணையதளத்திலும், யூடியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்…

ராணுவ வீரர்களுக்கான பொது நுழைவு ஆன்லைன் தேர்வு, ஏப்ரல் 17 முதல் 30 வரை இந்தியா முழுவதும் 175 முதல் 180 தேர்வு மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐடிஐ இரண்டாண்டு படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் மற்றும் டிப்ளமோ படித்தவர் விண்ணப்பிக்கலாம்.. என்சிசி படித்து ஏ, பி அல்லது சி சான்றிதழ்கள் பெற்ற சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு “போனஸ் புள்ளிகள்” வழங்கப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் H5N1 பறவை காய்ச்சல்...! மனிதர்களுக்கு பரவும் அபாயம்...! குழு அமைத்த மத்திய அரசு...!

Fri Feb 24 , 2023
ஜார்க்கண்டில் உள்ள அரசு கோழிப்பண்ணையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள தேசிய கால்நடை நோய்த் தடுப்பு நிறுவனத்தின் ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில், H5N1 எனப்படும் பறவைக்காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரி 17-ம் தேதி எடுக்கப்பட்ட மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்ட் முழுவதும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு 2023 பிப்ரவரி 20-ம் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. […]

You May Like