அக்னிவீர் வாயு திட்டம் மூலம் இந்திய விமானப் படையில் சேர்வதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 23 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிவீர் வாயு திட்டம் மூலம் இந்திய விமானப் படையில் சேர விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 23 (பிற்பகல் 5 மணி வரை). இந்திய விமானப் படை வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
2002 ஜூன் 27க்கும் 2005 டிசம்பர் 27க்கும் இடையே (இரண்டு தேதிகளும் நீங்கலாக) பிறந்த, திருமணமாகாத ஆண்களும் பெண்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர்.ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.