fbpx

Breaking: வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து…!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் எழுதிய நுழைவுத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது அவர்களிடையே குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஜூலை மாதமே தொடங்கிவிட்ட நிலையில் மீண்டும் எப்போது நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும், அந்த தேர்வு நடைபெற்று முடிந்து எப்போது கல்லூரிகளில் சேர்வது என்பது குறித்த சந்தேகம் மாணவர்கள் இடையே உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி கூறியதாவது; தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சாஃப்ட்வேர் பிரச்னைகளால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 10 நாட்களில் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார். மேலும் மாணவர்கள் சேர்க்கையில் தாமதம் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.

English Summary

Agricultural University Masters Entrance Exam Cancelled.

Vignesh

Next Post

யூரோ 2024!. இளம் வீரர் அதிரடி!. இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின்!. பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி!

Wed Jul 10 , 2024
Euro 2024!. Action of the young player! Spain entered the finals! France shock defeat!

You May Like