அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய லோகோவை இன்றைய தினம் (அக்.22) அறிமுகம் செய்திருக்கிறது.
இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் BSNL-ன் புதிய லோகோவையும், 7 புதிய அம்சத்தையும் அமைச்சர் ஜோதிராதித்ய தொடங்கி வைத்தார். அதன்படி, பழைய லோகோவில் சாம்பல் நிறத்தில் இருக்கும் வட்டத்தை சுற்றி சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் இருந்த வளைந்த குறிகள் இருக்கும். BSNL என்ற பெயரின் கீழ் Connecting To India என எழுதப்பட்டிருக்கும்.
தற்போது மாற்றப்பட்ட அந்த புதிய லோகோவில், காவி கலரில் வட்டமும், அந்த வட்டத்திற்குள் இந்திய நாட்டின் வரைபடமும் உள்ளது. மாற்றப்பட்ட அந்த புதிய லோகோவை பார்க்கையில் அது நமது தேசிய கோடியை ஞாபகப்படுத்துவதை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், Connecting to India என்ற வாக்கியமும் தற்போது Connecting to Barat (கனெக்ட்டிங் டூ பாரத்) என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 7 புதிய சேவைகளையும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.
7 புதிய அம்சங்கள் :
* ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க் பிஎஸ்என்எல் ஐஃஎப்டிவி (BSNL IFTV)
* டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி
* பைபர் டு தி ஹோம்
* பயனர்களுக்கு தேசிய Wi-Fi ரோமிங் சேவை
* என்கிரிப்டட் கம்யூனிகேஷன் ஃபார் டிஸாஸ்டர்ஸ்
* நிலக்கரி சுரங்கத்துக்கு பிரத்யேக 5ஜி நெட்வொர்க்
ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க் மூலம் பயனர்கள் மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்க வழிவகுக்கிறது. அதே போல, டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி என்ற சேவையின் மூலம் பயனர்கள் தடையில்லா நெட்வொர்க் இணைப்பை சாட்டிலைட் மற்றும் மொபைல் நெட்வொர்குகள் மூலம் பெறலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
Read More : மருமகளுடன் உல்லாசம்..!! எரிந்த நிலையில் கிடந்த உடல்..!! 72 வயது முதியவரை தீர்த்துக் கட்டிய நண்பன்..!!