fbpx

கீல்வாதம் நோயை 8 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கும் AI தொழில்நுட்பம்.!! மருத்துவத்துறையில் புதிய சாதனை.!!

AI உதவியுடன் நடத்தப்படும் ரத்த பரிசோதனைகள் முழங்கால் கீல்வாதம் ஏற்படுவதை எக்ஸ்ரே மூலம் கண்டறிவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்க கூடும் என புதிய ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது . இதன் மூலம் நோய் ஏற்படும் ஆபத்தில் இருப்பவர்களை கண்டறிவதற்கும் நோயின் தீவிரம் அதிகரிப்பதை தடுப்பதற்கும் உதவும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்தவித அறிகுறிகளையும் வெளி காட்டாத அவர்களுக்கு முழங்கால் கீல்வாதம் ஏற்படுவதை ரத்தப் பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கிறது. அவர்களது எலும்புகளில் ஏற்படும் மாற்றங்கள் எக்ஸ்ரேவில் வெளிப்படுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பாக AI தொழில்நுட்பத்துடன் கூடிய ரத்த பரிசோதனையில் அறிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் 200 வெள்ளை இன பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினர். அவர்களுக்கு முழங்கால் கீல்வாதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மேலும் முழங்கால் கீல்வாதத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளான முழங்கால் காயம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கான ஆபத்துகளும் குறைவாக இருந்தது.

தனிநபர்களின் ஆபத்தை கணிக்க இரத்த ஓட்டத்தில் இருக்கும் புரதங்களை பகுப்பாய்வு செய்வதில் கவனம் செலுத்தும் நாவல் சோதனையைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் சோதனையில் பங்கேற்றவர்களிடம் மதிப்பீடு செய்தனர். 10 ஆண்டுகளுக்குள் ஒரு நபருக்கு முழங்கால் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பை வெறும் 6 இரத்தப் புரதங்களைப் பயன்படுத்தி துல்லியமாகக் கணிக்க முடியும் என்று அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த ஆய்வு முடிவுகள் சயின்ஸ் அட்வான்ஸ் செய்தலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

சில நேரங்களில் எக்ஸ்ரேயை விட தோராயமாக 8 ஆண்டுகளுக்கு முன்பே முழங்கால் கீல்வாதம் ஏற்படுவதை இந்த ரத்த பரிசோதனையின் மூலம் அறிந்து கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முழங்கால் கீல்வாதத்திற்கு மருந்துகள் இல்லை என்றாலும் அவற்றின் தாக்கத்தை குறைப்பதற்கான வழிமுறைகளை பயன்படுத்துவதற்கு இந்த ரத்த பரிசோதனை உதவும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு கரோலினாவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசிரியரும் இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியருமான டாக்டர். வர்ஜீனியா பையர்ஸ் க்ராஸ், ” முழங்கால் கீல்வாதத்தை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் தனி நபர்களுக்கு தடுப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதில் விழிப்புணர்வாக அமையும் என தெரிவித்திருக்கிறார். வலி, இயலாமை மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை போன்ற அடுத்தடுத்த சிக்கல்களை தவிர்ப்பதற்கு உதவும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

வரும் காலங்களில் முழங்கால் கீல்வாதத்திற்கான மேம்பட்ட தடுப்பு சிகிச்சையின் வளர்ச்சிக்கு ஆராய்ச்சி முடிவுகள் பங்களிக்கக்கூடும். மேலும் இந்த சிகிச்சைகள் நோயுடன் தொடர்புடைய இரத்த ஓட்டத்தில் உள்ள குறிப்பிட்ட புரதங்களை குறிவைத்து தடுப்பதற்கு மிகவும் பயனுள்ள விருப்பங்களை வழங்குவதாக டாக்டர் க்ராஸ் தெரிவித்துள்ளார்.

Read More: BoB மொபைல் செயலி மீதான தடையை நீக்கியது ரிசர்வ் வங்கி.. வாடிக்கையாளர்கள் குஷி..!

Next Post

செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து: 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி…!

Thu May 9 , 2024
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தின் காரணமாக பட்டாசு ஆலையின் 7 அறைகள் தரைமட்டமாகியுள்ளன. இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தனியறை பாட்டாசு ஆளை […]

You May Like