யுனைடெட் கிங்டம், AI கேமரா மூலம் மூன்று நாட்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட 300 ஓட்டுனர்கள் கண்டறியப்பட்டுள்ளன. வாகனத்தை இயக்கும்போது செல்போன் பயன்படுத்திய 117 பேர்கள், மற்றும் சீட் பெல்ட் அணியாமல் இருந்த 180 பேர்கள் என மொத்தம் 297 பேர்களை அடையாளம் காணப்பட்டு காவல்துறைக்கு உதவியுள்ளது செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம்.
கடந்த ஆண்டு இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் சோதித்தபோது, சீட் பெல்ட் அணியாமல் இருந்த ஓட்டுநர்களின் எண்ணிக்கையால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம். வாகனத்திற்குள் தொலைபேசியைப் பயன்படுத்துபவர்களுக்கு தெளிவான செய்தியை அனுப்ப இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம் என்று டெவோன் மற்றும் கார்ன்வால் மாவட்ட காவல்துறையின் சாலைப் பாதுகாப்புத் தலைவர் அட்ரியன் லீஸ்க் தெரிவித்தார்.
சாலைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறும் ஓட்டுநர்களைப் பிடிக்க AI கேமராக்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
யுனைடெட் கிங்டம்-இன் A30 இல் பயன்படுத்தப்பட்ட இந்த அதிவேக AI கேமராக்கள், ஃப்ளாஷ்கள் மற்றும் மேம்பட்ட வடிகட்டுதல்(advance filters) மூலம் வாகனங்களின் தெளிவான படங்களைப் பிடிக்க உதவுகிறது. AI தொழிநுட்பம் சாத்தியமான குற்றங்களைக் கண்டறிந்தாலும், மனித மதிப்பாய்வு துல்லியத்தை உறுதி செய்கிறது. சாலை விதிகளை மீறுபவர்களின் படங்கள் எடுக்கப்பட்டு அவர்களிடம் உறுதிப்படுத்தப்படுகின்றன. அவர்கள் செய்த குற்றத்தை பொறுத்து, ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அல்லது உத்தேசித்துள்ள வழக்கு பற்றிய அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த AI தொழில்நுட்பம் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் நியாயமான மனித மேற்பார்வையைப் பராமரிக்கிறது.