fbpx

AI தொழில்நுட்ப வளர்ச்சி!… ஐடி ஊழியர்களை பாதிக்கும் அபாயம்?… ZOHO தலைமை அதிகாரி எச்சரிக்கை!

ஐடி துறையில் AI தொழில்நுட்ப வளர்ச்சியானது ஐடி மென்பொறியாளர்களை பாதிக்கும் என ZOHO நிறுவன தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்துள்ளார்.

ஐடி துறை தற்போது அபரிவிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தின் வருகையில் ஐடி ஊழியர்கள் சற்று கலக்கத்தில் தான் இருக்கிறார்கள் என.கூறப்படுகிறது . காரணம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது நமக்கு எந்த மாதிரியான மென்பொருள்/தேவை வேண்டும் என கோருகிறோமோ, அதனை அப்படியே தரும் தொழில் நுட்பமாகும். இதனால், ஐடி ஊழியர்களுக்கான இந்த வேலைவாய்ப்பில் இந்த AI தொழில்நுட்பமானது சற்று அதிரவளையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த AI தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பிரபல மென்பொருள் நிறுவனமான ZOHO நிறுவன தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கூறுகையில், செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்ப வளர்ச்சியானது தொழிலாளர்களுக்கு, குறிப்பாக மென்பொறியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. என குறிப்பிட்டார்.மேலும், ” மென்பொருள் உருவாக்கம் என்பது இன்று நெசவுதொழில் போன்றது. இதில் AI தொழில்நுட்ப வரவு என்பது ஒரு விசைத்தறி போன்றது. இதன் முதல் வேலை மென்பொறியாளர்களை அச்சுறுத்துவது தான் என்று ஸ்ரீதர் வேம்பு தனது கருத்தை பதிவிட்டார்.

Kokila

Next Post

நாளை பூமிக்கு மிக நெருக்கமாக வரும் விண்கல்!... பேரழிவை ஏற்படுத்தக்கூடும்?... நாசா கூறுவது என்ன?

Wed Apr 5 , 2023
2023 FZ3 என்ற மிகப்பெரிய விண்கல் நாளை (ஏப்ரல் 6)ம் தேதியன்று பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா கூறியுள்ளது. பூமியை நெருங்கும் விண்கற்கள் பற்றிய எச்சரிக்கை அவ்வப்போது வெளியாகிவருகின்றன. அவை பூமி மீது மோதுவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. சமீபத்தில், நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், வருங்காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கற்கள் பற்றித் தெரிவித்துள்ளது. ஐந்து விண்கற்கள் பூமியை நெருங்கும் […]

You May Like