fbpx

AI தொழில்நுட்பம் படுத்தும்பாடு!… ஆன்லைன் மோசடிகளால் பணத்தை இழக்கும் இந்தியர்கள்!… ஷாக் ரிப்போர்ட்!

ஆன்லைன் மோசடியால் பணத்தை இழந்தவர்களில் 83 சதவீத இந்தியர்கள் Al-ஆல் உருவாக்கப்பட்ட பொய்யான தொலைபேசி அழைப்புகளை நம்பி பணத்தை இழந்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

தற்போது ஐடி துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பிரிவு என்றால் அது செயற்கை நுண்ணறிவு திறன் எனப்படும் AI தொழில்நுட்பம் ஆகும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்புகள் போகும் நிலை ஏற்படும் என்றாலும் இந்த துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி கொண்டு இருக்கின்றன. எந்த அளவுக்கு நன்மை இருந்தாலும், தீமையும் அதே போல இருக்க தான் செய்யும் என்பது போல, இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் போல பேச வைத்து அதன் மூலம் பணத்தை திருடும் குற்றங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன.

இது குறித்து McAfee எனும் ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனம் ஓர் ஆய்வு ஒன்றை நடத்தியது . அதில் ஆன்லைன் மோசடியால் பணத்தை இழந்தவர்களில் 83 சதவீத இந்தியர்கள் Al-ஆல் உருவாக்கப்பட்ட பொய்யான தொலைபேசி அழைப்புகளை நம்பி பணத்தை இழந்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. மேலும், இதில் 48% பேர் 50,000க்கும் மேல் பணத்தை இழந்துள்ளனர் எனவும், 69 சதவீதத்தினர் AIஆல் உருவாக்கப்பட்ட குரலையும், மனிதர்களின் குரலையும் அடையாளம் கண்டுபிடிக்க இயலவில்லை என கூறியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் ஆய்வில் வெளியாகியுளளது.

Kokila

Next Post

இனிமேல் இவர்கள் இலவச ரேஷனைப் பயன்படுத்த முடியாது!... புதிய உத்தரவு போட்ட அரசு!... புகார் எண்கள் அறிவிப்பு!

Thu May 4 , 2023
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால், இனி இலவச ரேஷனைப் பயன்படுத்த முடியாது என்று அதிர்ச்சி செய்தியை தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ரேஷன் டெப்போ ஆபரேட்டர்களின் தன்னிச்சை குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்தநிலையில், இந்த பிரச்சனைகளை சரிசெய்யும் வகையில் தற்போது உணவு மற்றும் வழங்கல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி, இதற்கான புதிய உத்தரவை அந்த […]

You May Like