fbpx

வேலைக்கு ஆப்பு வைக்கும் AI..!! ஒரே மாதத்தில் 1,000 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பிய பேடிஎம் நிறுவனம்..!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையாலும், குறிப்பிட்ட சேவையை நிறுத்தியதாலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1,000 பணியாளர்களை பிரபல பேடிஎம் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

பே.டி.எம். நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்திருப்பதாக அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 10 முதல் 15 சதவிகித ஊழியர்களுக்கு ஆகும் செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும், பணியும் சிறப்பாக முடிக்கப்படுவதாக பே.டி.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பணித்திறன் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1,000 பணியாளர்களை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கடன் வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்துள்ளனர். குறுகிய தொகை கடன் வழங்குவதை பே.டி.எம். நிறுவனம் நிறுத்தியதன் எதிரொலியாகவும், இப்பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் 12 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது..!! குடும்ப அட்டைதாரர்கள் ஷாக்..!!

Tue Dec 26 , 2023
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு 2024ஆம் ஆண்டில் 12 நாட்கள் பொதுவிடுமுறை தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் 24 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த 24 பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் விடுமுறை […]

You May Like