fbpx

அதிமுக கூட்டணி உடைகிறது..? போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் அதிருப்தி..!! 2 நாட்களில் முடிவு அறிவிப்பு..!!

அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், தேமுதிகவுக்கு மத்திய சென்னை, விருதுநகர், திருவள்ளூர் (தனி), தஞ்சை, கடலூர் ஆகிய தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணிக்கு புரட்சி பாரதம் ஆதரவு தருவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், திருவள்ளூர் தொகுதி கேட்டு அவர் விடுத்த கோரிக்கையை அதிமுக நிராகரித்ததாக தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த பூவை ஜெகன்மூர்த்தி, கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More : 2024 IPL போட்டியுடன் முடிகிறது தோனியின் கிரிக்கெட் சகாப்தம்..!! ஓய்வு அறிவிப்பு..!!

Chella

Next Post

தமிழ்நாட்டில் புதிதாக உருவாகும் 4 மாநகராட்சிகள்..!! உங்க பகுதியும் இந்த லிஸ்ட்ல இருக்கான்னு பாருங்க..!!

Fri Mar 22 , 2024
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதன்படி, புதிதாக உருவாக்கப்பட உள்ள காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் மாநகராட்சிகளில் சேர்க்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளின் விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாநகராட்சி : நாமக்கல் நகராட்சி உடன் வகுரம்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, வள்ளிப்புரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், பாப்பிநாயக்கன்பட்டி, சலுவம்பட்டி, தொட்டிப்படி, மசூர்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி […]

You May Like