fbpx

ஒகேனக்கல் உபநீர் திட்டம் பற்றி எல்லாம் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தெரியாது.. தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ்..!

தருமபுரி, காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நேற்று முதல் மூன்று நாட்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி மாவட்டத்தில் பிரச்சார நடைபயணம் செய்து வருகிறார். நேற்று ஒகேனக்கல்லில் உள்ள கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்து பிரச்சாரத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று குரும்பட்டி, நடுப்பட்டி, ஒடசல்பட்டி, கடத்தூர் போன்ற இடங்களில் பிரச்சார நடை பயணத்தை தொடர்ந்தார். பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ்,

தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் இளைஞர்கள், வாழ்வாதாரம் இல்லாமல், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற பல்வேறு இடங்களுக்கு வாழ்வாதாரம் தேடி செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் சிப்காட் அமைத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் அதிமுகவுக்கும் திமுகவிற்கும் காவிரி உபரிநீர் திட்டம் எல்லாம் பற்றியெல்லாம் கவலையில்லை. அதிமுகவும், திமுகவும் அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கின்றனர். ஆனால், பாமக மட்டும் தான் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறது.

ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் பற்றியெல்லாம் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தெரியாது. இந்த திட்டத்தை கொண்டுவரவேண்டும் என பாமக தான் முதலில் வலியுறுத்தியது என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறுகையில், கிரைண்டர், மிக்ஸி போன்ற வாக்குக்கான இலவசங்கள் வேண்டாம். கல்வி, மருத்துவம், சுகாதாரம், விவசாய பொருள்கள் போன்ற வளர்ச்சிக்கான திட்டங்கள் வேண்டும் என கடந்த பத்து ஆண்டுகளாக பாமக கூறி வருகிறது.

இலவசங்களால் தமிழ்நாட்டிற்கு இதுவரை ஆறு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்த கடனுக்காக மட்டும் தமிழகம் 97 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய நிலையில் உள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் தான். இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Rupa

Next Post

பெண்களுக்கு அசத்தல் அறிவிப்பு.. இண்டர்நெட் சேவையுடன் கூடிய ஸ்மார்ட்போன் இலவசம்..

Sat Aug 20 , 2022
முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசு, 1.35 கோடி பெண்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அரசின் முக்யமந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா, மாநிலத்தில் 1.35 கோடி பெண்களுக்கு ஸ்மார்ட்போன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது மூன்று குறிப்பிடத்தக்க தேசிய தொலைத்தொடர்பு வழங்குநர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்திற்கான மதிப்பீட்டிற்குப் பிறகு ஏலதாரர்களை உயர்மட்டக் குழு முடிவு செய்யும் என்று […]

You May Like