fbpx

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது..!! தேர்தலில் தனித்துப் போட்டி..? மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து பாஜக மேலிடத்தில் புகாரளித்துள்ளோம். பலமுறை எச்சரித்தும் அண்ணாமலை அலட்சியப்படுத்தி வருகிறார். பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணியில் இல்லை. இது தான் அதிமுகவின் நிலைப்பாடு.

கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. தனித்து நின்றால் நோட்டாவை கூட அண்ணாமலையால் தாண்ட முடியாது. அதிமுகவுக்குள் எந்த குழப்பமும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை பற்றி விமர்சனம் செய்தால் கடுமையான அளவுக்கு விமர்சனங்களை சந்திக்க நேரிடும்.

அண்ணாமலையை அதிமுக தொண்டர்கள் தாறுமாறாக விமர்சிப்பார்கள். கூட்டணி தர்மத்திற்கு எதிராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். பாஜகவுடனான கூட்டணி குறித்து தேர்தலின் போது முடிவு செய்வோம். அண்ணாமலையை தேசிய தலைமை தான் இயக்குகிறது. எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்” என்றார்.

Chella

Next Post

தமிழ்நாட்டிற்கு 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு..!! காவிரி மேலாண்மை வாரியம் அதிரடி..!!

Mon Sep 18 , 2023
தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், கர்நாடக அரசு திடீரென தண்ணீர் திறப்பதை நிறுத்திவிட்டது. இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 15 […]

You May Like