அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகாவின் முன்னாள் அமைச்சரம், ராஜ்யசபா எம்.பி.யுமான சிவி.சண்முகம் அவர்களுக்கு தொடர் இருமல் மற்றும் ஜலதோஷம் காரணமாக இன்று பகல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடைபெற்றது, இதில் எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தோற்று உறுதி செய்பட்ட நிலையில் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளதை அடுத்து அவர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. தினசரி காரோண எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகள் உத்தரவிட்டு வருகின்றன.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 594 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,669 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன