fbpx

அதிமுக முன்னாள் MLA பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு..!! தொடர் சோதனையால் எடப்பாடி அதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து பிரதான கட்சிகளும் ஆயுதமாகி வரும் நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் இறங்கியுள்ளது. இன்று காலை முதல் பிரபு மற்றும் அவரது தந்தை அய்யப்பா ஆகிய இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரபு மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரது வீடு, பண்ணை வீடு பால்பண்ணை உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பிரபுவின் தந்தை அய்யப்பா, அதிமுகவில் தியாகதுருகம் ஒன்றிய செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ADMK | ’யாரும் எதிர்பார்க்கல’..!! ’டாப் பதவியை கேட்கும் பாமக’..!! எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி..!!

Chella

Next Post

Nurse | ’என் ஆடைகளைக் கழற்றினால்.. நீ ஆப்பிரிக்கர்களை விரும்புவாய்’..!! இந்திய செவிலியரிடம் ஆபாச பேச்சு..!!

Fri Mar 1 , 2024
ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியச் செவிலியரிடம் மிகவும் ஆபாசமாக பேசும் வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பி வருகிறது. இந்தியா மருத்துவத் துறை மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சிகிச்சைக்காக இந்தியா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்படி வரும் நோயாளிகள் சிகிச்சை முடிந்து பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்புவார்கள். ஆனால், அப்படி நோயாளிகளில் வரும் சிலர், நமது செவிலியர்களிடம் நடந்து கொள்ளும் விதம் […]

You May Like