fbpx

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..!! திடீரென தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15ஆம் தேதி அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறவுள்ளதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், அடுத்தகட்ட கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கட்சி சட்ட திட்ட விதிகள்படி, டிசம்பர் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. கட்சி செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : “ஃபெங்கல் புயல் 36 மணிநேரம் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும்”..!! டெல்டா மாவட்டங்களுக்கு மிக மிக கனமழை எச்சரிக்கை..!!

English Summary

It has been reported that the AIADMK Executive Committee and General Committee meeting will be held on December 15th.

Chella

Next Post

திருமண ஆவணப்பட விவகாரம்.. நயன்தாரா மீது வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி..!!

Wed Nov 27 , 2024
Madras High Court has given permission to Dhanush's company Wonderbar to file a case against actress Nayanthara.

You May Like