fbpx

அதிமுக பொதுக்குழு..! தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கு..! ஐகோர்ட் அதிரடி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு..! தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கு..! ஐகோர்ட் அதிரடி

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில்  முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு..! தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கு..! ஐகோர்ட் அதிரடி

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு நகலை சமர்பித்தார். மனுதாரர் ஆஜராகி ஏற்கனவே இதே அமர்வு பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதால், வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தீர்ப்பு நகலை படித்து பார்க்க அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Chella

Next Post

இங்கு எப்போதும் ஒரே ஷாருக்கான் தான்.. துல்கர் சல்மான் நெகிழ்ச்சி பதிவு..!

Tue Sep 20 , 2022
துல்கர் சல்மான் தான் தென்னிந்தியாவின் அடுத்த ஷாருக்கான் என்று ரசிகர்கள் விமர்சனங்கள் செய்து வந்தனர். மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் கதாநாயகனாக துல்கர் சல்மான் இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான “சீதா ராமம்” படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து இந்தி படத்திலும் நடிக்க துல்கர் சல்மானுக்கு வாய்ப்புகள் வந்து […]

You May Like